மீன லக்னம் 1-ஆம் பாவம்வரை சென்ற இதழ்களில் பார்த்தோம். இனி மற்ற பாவங்களைக் காணலாம்.
2-ஆம் பாவம்
ஜென்ம லக்னத்திற்கு 2-ஆம் பாவத்தைக் கொண்டு பொருளாதாரநிலை, குடும்பம், வாக்கு, பேச்சாற்றல், வலது கண் போன்றவற்றைப் பற்றி அறியலாம்.
மீன லக்னத்திற்கு 2-ஆம் அதிபதி செவ்வாயும், தனகாரகன் குருவும் பலமாக அமைந்தால் பொருளாதாரநிலை மிகச்சிறப் பாக இருக்கும். லக்னாதிபதி குருவுக்கு செவ்வாய் நட்பு கிரகமாகும். செவ்வாய் ஆட்சி, உச்சம் பெற்று கேந்திர, திரிகோணங்களில் பலமாக அமைந்தாலும்; குரு, சந்திரன், சூரியன் போன்ற நட்பு கிரகச்சேர்க்கை பெற்று பலமாக அமைந்தாலும் சிறப்புமிகு பலனும், தாராள தனவரவும் உண்டாகும்.
செவ்வாய்- சுக்கிரன், புதன் போன்ற கிரகச் சேர்க்கை பெற்றாலும் ஓரளவுக்கு நற்பலன் உண்டாகும். செவ்வாய், குரு பலம்பெறுவது மட்டுமன்றி, சந்திரனுக்கு 2-ஆம் அதிபதியும் பலமாக அமைந்தால் நற்பலன்கள் உண்டாகும். செவ்வாய் மற்றும் சூரியன், சந்திரன் சேர்க்கை பலமாகமைந்தால் பூர்வீகவழி யிலும், தந்தைவழியிலும் நல்ல தனலாபம், பொருளாதார மேன்மை, லட்சலட்சமாகப் பணம் சேரும் யோகம் உண்டாகும். செவ்வாய் பலம்பெற்று உடன் சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் சேர்க்கை பெற்றால், தவறானவழிகளில் பணம் சம்பாதிக்கக்கூடிய நிலை ஏற்படும். செவ்வாய், குரு பலமிழந்து, சனி, ராகு போன்ற பாவிகளுக்கிடையே அமைந் தாலும், 2-ல் சனி, ராகு அமைந்தாலும் கடுமை யான பொருளாதார நெருக்கடி, பணத்திற் காகக் கஷ்டப்படும் நிலை உண்டாகும். குரு நீசம், வக்ரம் பெற்றாலும், செவ்வாய் நீசம், வக்ரம் பெற்றாலும், பாதக ஸ்தானமான 7-ஆம் வீட்டில் அமைந்தாலும் பணவரவில் தடை, இடையூறுகள் உண்டாகும்.
2-ஆம் அதிபதி செவ்வாய்- குரு, சந்திரன், சுக்கிரன், புதன் போன்ற கிரகங்களின் சேர்க்கை பெற்று கேந்திர- திரிகோணங்களில் (5, 7 தவிர) பலமாக அமைந்தால் சிறப்பான குடும்ப வாழ்க்கை உண்டாகும். 2-ஆம் வீட்டில் குரு, சுக்கிரன், சந்திரன் போன்ற சுபகிரகங்கள் அமைவதோ, 2-ஆம் வீட்டைப் பார்வை செய்வதோ குடும்ப வாழ்வில் அமைதியையும், ஒற்றுமையையும் உண்டாக்கும். 2-ஆம் வீட்டில் சனி நீசம் பெற்றாலும், சர்ப்ப கிரகங்களான ராகு- கேது 2-ல் அமைந் தாலும் குடும்ப வாழ்வில் அமைதி இருக்காது.
செவ்வாய் பலமிழந்து சனி, ராகு சேர்க்கை பெற்ôலும், 2-ல் பாவகிரகங்கள் அமைந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. செவ்வாய் பலம்பெறு வது மட்டுமன்றி, சந்திரனுக்கு 2-ல் பாவிகள் இல்லாமல் சுபர் அமைவது அனுகூலப்பலனை உண்டாக்கும். 2-ஆம் வீட்டில் பாவகிரகங்கள் அமைந்து, அதன் தசாபுக்தி நடைபெற்றால் குடும்ப வாழ்வில் ஒற்றுமையில்லாத நிலை, பிரிவு, பிரச்சினை உண்டாகும்.
2-ஆம் வீட்டைக்கொண்டு பேச்சாற்றல், வாக்கு வண்மையைப் பற்றி அறியலாம். மீன லக்னத்திற்கு செவ்வாய் 2-ஆம் அதிபதி என்பதால், பேச்சில் முரட்டுத்தனம், அதிகாரத் துவமாகப் பேசும் அமைப்பு, வேகம், விவேகம் இருக்கும். 2-ல் குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன், புதன் போன்ற சுபகிர கங்கள் அமைந்தாலும், 2-ஆம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்தாலும் நல்ல பேச்சாற்றல், வாக்கால்- பேச்சால் பல்வேறு சாதனைகளைச் செய்யும் அமைப்புண்டாகும். 2-ஆம் வீட்டில் சனி, ராகு அமைந்தாலும், செவ்வாய், சனி, ராகு சேர்க்கை பெற்றாலும், செவ்வாய் வக்ரம் பெற்றாலும் முரட்டுத்தனமாகப் பேசும் தன்மை, பேச்சால் பல்வேறு சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும் அமைப்பு, மற்றவர்கள் மனம் புண்படுமளவிற்குப் பேசும் நிலை, பேச்சில் நாணயமற்ற அமைப் புண்டாகும்.
2-ஆம் வீடு வலது கண்ணைக் குறிக்கும் ஸ்தானமாகும். 2-ஆம் அதிபதி செவ்வாய் சுபர் சேர்க்கை பெற்று, 2-ஆம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்தால் கண் பார்வை சிறப்பாக இருக்கும். அதுவே 2-ல் சனி, ராகு போன்ற பாவிகள் அமைந்தாலும், 2-க்கு 7-ஆம் வீடான 8-ல்சனி, ராகு போன்ற பாவிகள் அமைந்தாலும், செவ்வாய்- சனி, ராகு சேர்க்கை பெற்றாலும் கண் பார்வை பாதிக்கும்.
கண்களுக்கு சூரியன், சுக்கிரன் காரகர்களாகும். 2, 8-ல் சூரியன், சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றால் கண் பார்வை பாதிக்கும். 2-ஆம் வீட்டை சனி பார்வை செய்வதும், செவ்வாய் பாவிகளுடன் சேர்க்கை பெறுவதும் கண் பார்வையை பாதிக்கும். 2-ஆம் வீட்டில் சந்திரன் அமைந்தாலும், செவ்வாய்- சந்திரன் சேர்க்கை பலமிழந்து காணப்பட்டாலும் கண்களில் நீர் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும்.
(மற்ற பாவங்கள் அடுத்த இதழில்)
செல்: 72001 63001
_______________
சமத்துவப் பொங்கலுடன் சமய நூல் வழங்கும் விழா!
பண்டைய காலங்களில் ஆன்மிக நூல்கள் படிப்பதென்பது அனைத்து மக்களிடமும் இருந்துவந்தது. படித்த அந்த கருத்துகளைப் பிள்ளைகள், பேரக்குழந்தைகளிடம் சொல்லிலி நல்லொழுக்கங்களைக் கற்றுக்கொடுத்து வளர்த்துவந்தனர்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் புத்தகம் படிப்பது அரிதாகிவிட்டது. தாத்தா, பாட்டிகள் கதை சொல்வது குறைந்துவிட்டன. பெற்றோர்கள் பிள்ளைகளுடன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வதும் குறைந்துவிட்டன.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரம், மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் போன்ற பன்னிரு திருமுறைகள் மற்றும் கம்பராமாயணம், திருவிளையாடற்புராணம், கண்ணனின் பகவத்கீதை, மகாபாரதம், திருவள்ளுவர் எழுதிய திருக்குறள், 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் என பலவிதமான நூல்கள் உள்ளன. ஆன்மிகம் வளரவும், நற்சிந்தனைகள் தழைத்தோங்கவும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் தமிழர் திருநாளில் 15-1-2020 புதன்கிழமை காலை 10.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணியளவில் சமத்துவப் பொங்கலுடன் சமய நூல்கள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
இந்த அற்புதமான விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு பிரார்த்திக்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு:
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம்,
அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை- 632 513.
ராணிப்பேட்டை மாவட்டம், தொலைபேசி: 04172- 230033, 230274.
அலைபேசி: 94433 30203.
Email : [email protected]